சூதாட்டம் 3 பேர் கைது
உடுமலை; உடுமலை அருகே விருகல்பட்டி பகுதியில், சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் போலீசார் சோதனை நடத்தினர். அதில், பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்த, அதே பகுதியை சேர்ந்த, மனோகரன், 32, தனபால், 28, கிேஷார், 24, ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து, 27 ஆயிரத்து, 400 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.