உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அவிநாசியில் 3 நாள் ஆதார் சிறப்பு முகாம்

அவிநாசியில் 3 நாள் ஆதார் சிறப்பு முகாம்

அவிநாசி; அவிநாசியில் தபால் துறை, ரோட்டரி அவிநாசி, அவிநாசி நெக்ஸ்ட் ஜெனரேஷன் ரோட்டரி ஆகியன இணைந்து ஆதார் பதிவு மற்றும் திருத்தம் சிறப்பு முகாமை நடத்துகின்றன. முகாம், அவிநாசி, மங்கலம் ரோட்டில் உள்ள அவிநாசி ரோட்டரி அரங்கத்தில், வரும், 21, 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் மூன்று நாள் நடைபெறுகிறது. தபால் துறை, ரோட்டரி அவிநாசி,ரோட்டரி அவிநாசி நெக்ஸ்ட் ஜெனரேஷன் ஆகியோர் இணைந்து முகாமை நடத்துகின்றனர். முகாமில் ஐந்து முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கைரேகைகள், கருவிழி புதுப்பித்தல் மற்றும் புதிய ஆதார் பதிவு செய்தல் உள்ளிட்ட சேவைகளுக்கு கட்டணம் இல்லை. முகாம் காலை 10:00 முதல் மாலை, 5:00 மணி வரை நடைபெறுகிறது. ஆதார் சிறப்பு முகாமில் பங்கேற்போர், வாக்காளர் அடையாள அட்டை, லைசன்ஸ், பான்கார்டு, வங்கி பாஸ்புக், பாஸ்போர்ட் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை புகைப்பட சான்றுக்காக கொண்டுவரலாம். இருப்பிட சான்றுக்கு ஊராட்சித் தலைவர் அல்லது அரசு பதிவு பெற்ற அதிகாரியிடம் சான்றிதழ் பெற்று திருத்தங்கள் செய்து கொள்ளலாம் என முகாம் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை