உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நாய்கள் கடித்து 30 ஆடுகள் பலி விவசாயிகள் சாலை மறியல்

நாய்கள் கடித்து 30 ஆடுகள் பலி விவசாயிகள் சாலை மறியல்

காங்கேயம்:திருப்பூர் மாவட்டம், காங்கேயம், ஊதியூர், மூலனுார், வெள்ளக்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்களால் கால்நடைகள் வேட்டையாடப்படுவது தொடர்கதையாக உள்ளது. கடந்த, 13ம் தேதி மறவம்பாளையத்தில் பட்டிக்குள் புகுந்த தெருநாய்கள், ஆடுகளை துரத்தியதில், 40 அடி ஆழ கிணற்றில் விழுந்து, 17 ஆடுகள் இறந்தன.இந்நிலையில், காங்கேயம், தொட்டியபட்டியை சேர்ந்த மோகன்குமார், 62, என்பவர், 70 செம்மறி ஆடுகளை வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, ஆடுகளை பட்டியில் அடைத்து சென்றார். நேற்று காலை பார்த்தபோது, 16 செம்மறி ஆடுகள், குட்டி உட்பட, 30 ஆடுகள் இறந்து கிடந்தன. உயிருக்கு போராடிக் கொண்டிருந்த, பத்து ஆடுகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.ஆவேசமடைந்த விவசாயிகள், காங்கேயத்தில் நேற்று, இறந்த ஆடுகளை சாலையில் கிடத்தி, மறியலில் ஈடுபட்டனர். அரசு அதிகாரிகள், விவசாயிகளிடம் பேச்சு நடத்தி உரிய தீர்வு காணப்படும் என உறுதியளித்ததால், விவசாயிகள் கலைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை