மேலும் செய்திகள்
பணிகள் முடிந்ததும் புது ரயில் இயக்கம்
12-Sep-2025
திருப்பூர்; திருப்பூருக்கு நேற்று வந்த பாட்னா ரயிலில், கேட்பாரற்றுக்கிடந்த, 36 கிலோ கஞ்சாவை, ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர். திருப்பூர் ரயில்வே போலீசார், நேற்று காலை ரயில்வே ஸ்டேஷனில், ரோந்து பணியில் இருந்தனர். காலை, 10:00 மணிக்கு, பாட்னா - எர்ணாகுளம் (எண்:22644) எக்ஸ்பிரஸ் ரயில், முதல் பிளார்ட்பாரத்தில் நின்றது. ரயிலின் பின்புறம் உள்ள பொது பெட்டியில் ஏறி, போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, கேட்பாரற்றுக் கிடந்த மூட்டையை சோதனை செய்த போது, கஞ்சா இருப்பது தெரியவந்தது. மொத்தம், 36 கிலோ கஞ்சாவுடன் இருந்த மூட்டையை பறிமுதல் செய்து, ரயில்வேபோலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
12-Sep-2025