உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு மாவட்டத்தில் 361 பேர் பங்கேற்பு

 ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு மாவட்டத்தில் 361 பேர் பங்கேற்பு

திருப்பூர்: திருப்பூரில் நாளை நடைபெறும் தொழில்நுட்ப பணிகள் தேர்வை, 361 பேர் எழுதுகின்றனர். டி.என்.பி.எஸ்.சி.,யின் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வு, திருப்பூர் மாவட்டத்தில் நாளை (16 ம் தேதி) நடைபெற உள்ளது. பல்லடம் -திருச்சி ரோடு கே.என்., புரத்திலுள்ள அம்பாள் புரபசனல் குரூப் ஆப் இன்ஸ்டிடியூஷன் மற்றும் திருப்பூர் குமரன் கல்லுாரி ஆகிய இரு மையங்களிலும், காலை மற்றும் மதியம் தேர்வு நடைபெறுகிறது; மொத்தம் 361 பேர் தேர்வு எழுதுகின்றனர். இது குறித்து, கலெக்டர் மனிஷ் நாரணவரே அறிக்கை: ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு ஏழுதுவோர், கட்டாயம் ஹால்டிக்கெட் கொண்டுவர வேண்டும். காலையில் தேர்வு எழுதுவோர், காலை, 8:30 மணிக்குள்ளாகவும், மதிய தேர்வர்கள், மதியம், 1:30 மணிக்குள் தேர்வு மையங்களில் இருக்க வேண்டும். காலை, 9:00 மணி, மதியம் 2:00 மணிக்கு மேல் தேர்வர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். தேர்வு மையத்துக்கு வந்து செல்ல ஏதுவாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது; தடையில்லாத மின்சாரம் வழங்கவும், அவசர தேவைகளுக்கு மருத்துவ குழுக்களும் தயார் நிலையில்இருப்பர். தேர்வர்கள் தங்கள் புகைப்பட அடையாளத்துக்காக ஏதேனும் ஒரு அடையாள அட்டை எடுத்துவரவேண்டும். மொபைல்போன், கம்ப்யூட்டர், டிஜிட்டல் வாட்ச் கொண்டுவர அனுமதி கிடையாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை