48 மாணவர்கள் அபாரம்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் - 2 மற்றும் 2ஏ முதல்நிலை தேர்வு, கடந்த செப்., 14ம் தேதி நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தில், கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கும் வேலைவாய்ப்பு அலுவலகத்திலுள்ள தன்னார்வ பயிலும் வட்டத்திலும், உடுமலை எக்ஸ்டன்சன் மேல்நிலைப்பள்ளியிலும் இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன. தேர்வு முடிவுகள் கடந்த 12ம் தேதி வெளியாகின. இதில், இப்பயிற்சி வகுப்பு களில் பயின்ற, 48 மாணவர்கள், குரூப் - 2 மற்றும் 2ஏ முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களின் நான்கு பேர் மாற்றுத்திறனாளிகள்.