உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 5 கிலோ கஞ்சா பறிமுதல்

5 கிலோ கஞ்சா பறிமுதல்

திருப்பூர் : திருப்பூரில் விற்பனைக்கு வைத்திருந்த, 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, பீஹார் வாலிபரை கைது செய்தனர். வீரபாண்டி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பல்லடம் ரோடு தமிழ்நாடு தியேட்டர் அருகில் சிலர் சந்தேகப்படும் வகையில் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அப்பகுதியில் ரோந்து மேற்கொண்ட போலீசார், வாலிபர் ஒருவரிடம் விசாரித்து, சோதனை செய்தனர். அதில் பீஹாரை சேர்ந்த ராசன்குமார், 21 என்பதும், தற்போது மண்ணரையில் தங்கி பனியன் நிறுவனத்துக்கு வேலைக்கு செல்வது தெரிந்தது. இவர் ரயிலில், ஐந்து கிலோ கஞ்சாவை, விற்பனைக்காக கடத்தி வந்தது தெரிந்தது. அவரைபோலீசார் கைது செய்து, பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை