மேலும் செய்திகள்
வெறிநாய்கள் கடித்து ஆறு ஆடுகள் பலி
09-May-2025
அவிநாசி, ; அவிநாசி அருகே, 15க்கும் மேற்பட்ட நாய்கள் கடித்ததில் கன்றுக்குட்டி பரிதாபமாக உயிரிழந்தது.அவிநாசி ஒன்றியம், கருமாபாளையம், செட்டி யார் பெரிய தோட்டத்தில் விஜயலட்சுமி என்பவர் விவசாயம் செய்து வருகிறார். பசு மாடுகள் மற்றும் ஆடுகள் வளர்த்து வருகிறார். நேற்று காலை சேவூர் ரோட்டில் உள்ள மேய்ச்சல் காட்டில் மாடுகள் மற்றும் ஆடுகளை மேய விட்டிருந்தார். அப்போது, 15க்கும் மேற்பட்ட நாய்கள், கன்றுக்குட்டியை கடித்து குதறியது.இதனை பார்த்த, விஜய லட்சுமி விரட்டவே, அவை அவரை கடிக்க துரத்தியதால், அவர் ஓடி தப்பினார். அதன்பின், அருகில் இருந்தவர்கள் உதவியுடன் கன்றுக்குட்டியை நாய்களிடமிருந்து மீட்டனர். இருப்பினும், அது துடிதுடித்து உயிரிழந்தது. இதே விஜயலட்சுமியின் தோட்டத்தில், கடந்த வாரம் பிறந்த கன்றுக்குட்டியை நாய்கள் கடித்து கொன்றது குறிப்பிடத்தக்கது.இதேபோல அருகில் உள்ள சக்திவேல் என்பவர் தோட்டத்தில் மேய்ச்சலில் இருந்த இரண்டு ஆடுகளும், மற்றொரு விவசாயின் தோட்டத்தில் இருந்த 4 ஆடுகளையும் நாய்கள் கடித்துக் கொன்றது. இவ்வாறு, ஒரு மாதத்துக்குள், ஆறு ஆடுகள், 2 கன்று குட்டி என நாய்கள் கடித்து பலியாகியுள்ளது.இதனையறிந்த கிராம நிர்வாக அலுவலர், கால்நடை மருத்துவர் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். நாய்கள் கடித்து பலியான ஆடுகள் மற்றும் கன்று குட்டிக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். நாய்களை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
09-May-2025