உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஜாக்டோ ஜியோ உண்ணாவிரதப் போராட்டம்

ஜாக்டோ ஜியோ உண்ணாவிரதப் போராட்டம்

திருப்பூர்: திருப்பூரில் நேற்று 'ஜாக்டோ ஜியோ' சார்பில் நடந்த உண்ணாவிரதத்தில் ஏராளமான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.'ஜாக்டோ ஜியோ' சார்பில், திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் நேற்று, உண்ணாவிரத போராட்டம் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு சந்திசேகரன், ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு பிரபு செபாஸ்டின், தமிழக ஆசிரியர் கூட்டமைப்பு பாலசுப்பிரமணியன், முதுகலை ஆசிரியர்கள் சங்கம் ராஜேஸ்வரி உள்பட நிர்வாகிகள் வாழ்த்தி பேசினார்.பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய திட்டத்தையை அமல்படுத்தவேண்டும். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசு பணியாளர்களுக்கு மறுக்கப்பட்டுள்ள 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத்தொகையை உடனடியாக வழங்கவேண்டும்.சிறப்பு காலமுறை ஊதியம் பெற்றுவரும், சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலர், ஊர்ப்புற நுாலகர், எம்.ஆர்.பி., செவிலியர், சிறப்பு ஆசிரியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கவேண்டும். 2002 முதல் 2004 வரை தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் பணிக்காலத்தை, பணியில் சேர்ந்த நாள் முதல் பணி வரன்முறைப்படுத்தி ஊதியம் வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தினரும், கலெக்டர் அலுவலகம் எதிரே, பஸ் ஸ்டாப் பகுதியில் நின்று கோஷங்கள் எழுப்பினர்.---திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன், 'ஜாக்டோ ஜியோ' அமைப்பு சார்பில், உண்ணாவிரதப்போராட்டம் நேற்று நடந்தது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பலர் பங்கேற்றனர்.

'இனியும் ஏமாற மாட்டோம்'

''எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, 'ஜாக்டோ ஜியோ' போராட்டத்தை ஆதரித்தார் முதல்வர் ஸ்டாலின். கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தும், எந்த கோரிக்கையையும் நிறைவேற்றித்தரவில்லை. இனியும் இந்த ஏமாற்றும் போக்கை அனுமதிக்க மாட்டோம்'' என்று போராட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

ராமகிருஷ்ணன்
மார் 24, 2025 14:31

லஞ்ச வெறி பிடித்த உங்கள் கும்பலுக்கு எதிராக மக்கள் களமிறங்கும் காலம் வந்து விட்டது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை