உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நம்பர் பிளேட் இல்லாமல் வலம் வரும் கார்

நம்பர் பிளேட் இல்லாமல் வலம் வரும் கார்

காங்கயம்: காங்கயத்தில் நம்பர் பிளேட் இல்லாமல், வெள்ளை நிற கார் ஒன்று சந்தேகப்படும் வகையில் நகரில் வலம் வருகிறது. அதே போல், வெளியில் இருந்து பார்த்தால்,உள்ளே இருப்பவர்கள் தெரியாத வகையில், கருப்பு கலர் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் பீதியில் உள்ளனர். குற்ற சம்பவத்தில் தொடர்பு உடையவர்கள், யாராவது வலம் வருகிறார்களா என்ற சந்தேகமும் ஐயமும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதுதொடர்பாக விசாரித்தால், குட்கா வழக்கில் தொடர்புடைய நபர் ஒருவரின் கார் என்பதும், இவருக்கு போலீஸ் வட்டாரத்தில் அனைவரையும் தெரியும் என்பதால் விதிமீறலில் ஈடுபட்டு வருகிறார். ஏற்கனவே, இந்த காரை, குட்கா வழக்கு ஒன்றில் போலீசார் கணக்கு காட்டியதாக ஒரு தகவலும் உள்ளது. எனவே, சந்தேகப்படும் வகையில், வலம் வரும் கார் குறித்து முழுமையாக போலீசார் விசாரித்துநடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை