உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குழந்தை தொழிலாளர் அற்ற பின்னலாடை சாம்ராஜ்யம்

குழந்தை தொழிலாளர் அற்ற பின்னலாடை சாம்ராஜ்யம்

ஆண்டுக்கு 60 ஆயிரம் கோடி ரூபாய்க்கு அதிகமான வர்த்தகத்தை ஈட்டும் திருப்பூர் பின்னலாடை சாம்ராஜ்யம், லட்சக்கணக்கானோரின் கடின உழைப்பாலும், தொழில்துறையினரின் விடாமுயற்சியாலும் கட்டமைக்கப்பட்டது.பல்வேறு சாதனைகளை புரிந்து, சர்வதேச புகழ் ஈட்டிய திருப்பூர் பின்னலாடை தொழில் நகரம், குழந்தை தொழிலாளர் இல்லாத நகரம் என்ற சாதனையை புரிந்திருக்கிறது. திருப்பூருக்கு சென்றால், எப்படியும் பிழைக்க முடியும் என்ற தன்னம்பிக்கையை கொடுத்த பின்னலாடை தொழில், சிறுவர், சிறுமியருக்கும் கூட வாய்ப்பு வழங்கியது.பள்ளி விடுமுறை நாட்களில், பின்னலாடை நிறுவனங்களுக்கு சென்றால், கையில் காசு சேர்க்கலாம் என, தொழிலாளர் குழந்தைகளும் வேலைக்கு சென்றனர். இதனால், பள்ளிக்கல்வியை பாதியில் நிறுத்தும் அபாயமும் இருந்தது.நாடு முழுவதும் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு திட்டம் துவங்கிய போது, திருப்பூர் முதன்முறையாக செயல்படுத்திய நகரம் என்ற பெருமையை தட்டிச்சென்றது. ஏற்றுமதி நிறுவனங்களுக்கு, வெளிநாட்டு வர்த்தகர்கள் விதிக்கும் முதல் நிபந்தனையே, 'குழந்தை தொழிலாளர் இருக்க கூடாது' என்பதுதான். இதன்காரணமாக, ஏற்றுமதி நிறுவனங்களில் குழந்தை தொழிலாளர் முறை துவக்க நிலையிலேயே மறைந்தது.அதற்கு பிறகு, அனைத்து பின்னலாடை நிறுவனங்களும், 'ஜாப் ஒர்க்' நிறுவனங்களும், குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்துவதை நிறுத்திக்கொண்டன. சிலவகை 'ஜாப் ஒர்க்' நிறுவனங்களில், குழந்தை தொழிலாளருக்கு வேலையில்லை.வெளிநாட்டு வர்த்தகர்கள், அரசுத்துறை அதிகாரிகள் குழுவினர், நிறுவனங்களை ஆய்வு செய்ய வருவது அதிகரித்ததால், பின்னலாடைத் தொழில்துறையினர், குழந்தை தொழிலாளர்களுக்கு வாய்ப்பளிக்க மறுத்தனர். குழந்தைகள், அடிப்படை பள்ளிக்கல்வியை முடிக்க வேண்டுமென அறிவுறுத்தவும் தவறவில்லை.குழந்தை தொழிலாளர்கள்இல்லை என்ற நிலை இன்று மட்டுமல்ல... என்றென்றும் தொடரும் என்று கூறுகின்றனர் பின்னலாடைத்துறையினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை