உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  தென்னையை சேதப்படுத்தும் குரங்கு கூட்டம்; மலையடிவார கிராம விவசாயிகள் பாதிப்பு

 தென்னையை சேதப்படுத்தும் குரங்கு கூட்டம்; மலையடிவார கிராம விவசாயிகள் பாதிப்பு

உடுமலை: உடுமலை மலையடிவார கிராமங்களில், 200க்கும் மேற்பட்ட குரங்குகள் புகுந்து தென்னை மரங்களை துவம்சம் செய்வதால், விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். உடுமலை மேற்கு தொடர்ச்சிமலை கிராமங்களான, திருமூர்த்திநகர், பொன்னாலம்மன்சோலை, வலையபாளையம், ராவணாபுரம், தேவனுார் புதுார் உள்ளிட்ட கிராமங்களிலுள்ள தென்னந்தோப்புகள், விவசாய நிலங்களில், வனத்திலிருந்து வெளியேறிய, 200க்கும் மேற்பட்ட குரங்குகள் முகாமிட்டுள்ளன. அவை, தென்னை மரங்களில் ஏறி, இளநீர், தேங்காய் ஆகியவற்றை பறித்து சேதப்படுத்துவதோடு, மற்ற பயிர்களையும் சேதப்படுத்தி வருகிறது. கடந்த சில நாட்களில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளநீரை பறித்து, வீணாகியதோடு, 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேங்காய்களையும் சேதப்படுத்தியுள்ளது. தினமும், விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுத்தி வரும் நிலையில், 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கடுமையாக பாதித்துள்ளனர். தென்னையை சேதப்படுத்தும் குரங்குகளை மீண்டும் வனத்திற்குள் விரட்டவும், உரிய இழப்பீடு வழங்கவும் வேண்டும், என விவசாயிகள் தொடர்ந்து வனத்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், கள ஆய்வு கூட மேற்கொள்ளவில்லை. எனவே, இதனை கண்டித்து விரைவில் போராட்டம் நடத்தப்படும் என உடுமலை விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்