உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திருக்கல்யாண உற்சவம் திரளான பக்தர்கள் பங்கேற்பு

திருக்கல்யாண உற்சவம் திரளான பக்தர்கள் பங்கேற்பு

உடுமலை,; சின்னவாளவாடி மாரியம்மன் கோவிலில் திருவிழாவையொட்டி, திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடந்தது.உடுமலை அருகே, சின்னவாளவாடி மாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த 13ம் தேதி கம்பம் போடுதலுடன் துவங்கியது. தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு சக்தி கும்பம் அழைக்கும் நிகழ்வு நடந்தது.நேற்று காலை, 7:00 மணிக்கு அம்பாள் திருக்கல்யாணமும், காலை, 9:00 மணிக்கு பக்தர்கள் மாவிளக்கு எடுத்தும், பொங்கல் வைத்தும் வழிபட்டனர். மதியம் பூவோடு எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இரவு 8:00 மணிக்கு கம்பம், சக்தி கும்பம் கங்கையில் விடுதலும், தொடர்ந்து பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.இந்நிகழ்ச்சியில், சின்னவாளவாடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களிலிருந்து, நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.இன்று சுவாமிக்கு மகா அபிேஷகம், மஞ்சள் நீராடுதல் மற்றும் சுவாமிக்கு அம்மன் திருவீதி உலா நடக்கிறது.இதற்கான ஏற்பாடுகளை, கோவில் விழா கமிட்டியினரும், சின்னவாளவாடி பொதுமக்களும் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை