உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குன்றாத குப்பை மலை; பாவம்... மக்கள் நிலை

குன்றாத குப்பை மலை; பாவம்... மக்கள் நிலை

எங்கு காணினும் குப்பைமயம்

மருதாசலபுரம் மெயின் வீதி, எல்.ஜி., மைதானத்தில் குப்பைகள் வழிநெடுக நிறைந்து காணப்படுகிறது. சுகாதாரம் பேண வேண்டும்.- மகிழ், மருதாசலபுரம். 24வது வார்டு, நாகத்தம்மன் கோவில் வீதியில் தேங்கியுள்ள குப்பையை அள்ள வேண்டும். ரோட்டில் தேங்கும் குப்பையால், சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.- ரவிக்குமார், நாகத்தம்மன் கோவில் வீதி.ஓம்சக்தி கோவில் வீதி, எம்.பி., நகரில் வழிநெடுகிலும் குப்பை தேங்கியுள்ளது. குப்பை அள்ள வேண்டும்.-- தினேஷ், எம்.பி., நகர். காலேஜ் ரோடு, குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் குப்பை தொட்டி நிறைந்துள்ளது. குப்பை எடுக்க வேண்டும்.- கார்த்திகேயன், காலேஜ் ரோடு. 58வது வார்டு, பழனியாண்டவர் நகரில் தேங்கியுள்ள குப்பையை அள்ள வேண்டும். ரோட்டோரத்தில் குப்பை நிறைந்துள்ளது.- குரு, பழனியாண்டவர் நகர். பலவஞ்சிபாளையம், மூகாம்பிகை நகர் எக்ஸ்டன்சன் பகுதியில் குப்பை வாங்க மாநகராட்சி ஊழியர் வருவதில்லை. திறந்த வெளியில் கொட்டும் குப்பையால், சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.- காயத்ரி, மூகாம்பிகை நகர்.

அள்ளாமல் விடலாமா?

பல்லடம் ஒன்றியம், கரைப்புதுார் ஊராட்சி, நொச்சிபாளையம் - மீனம்பாறை ரோட்டில் குப்பை அள்ளாமல் அப்படியே விட்டுள்ளனர். குப்பைகளை நாய்கள் இழுத்து ரோட்டுக்கு கொண்டு வந்து விடுகிறது.- செல்வராஜ், நொச்சிபாளையம்.

அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு

திருப்பூர், நல்லுார் - பலவஞ்சிபாளையம் ரிங்ரோட்டில் ரோட்டோர ஆக்கிரமிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆக்கிரமிப்புகள் குறித்து ஆய்வு செய்திட வேண்டும்.- மகேஷ், பலவஞ்சிபாளையம்.

சிக்னல் பழுது

திருப்பூர், பல்லடம் ரோடு, வீரபாண்டி நால்ரோட்டில் சிக்னல் அடிக்கடி பழுதாகிறது. குறைபாடுகளை சரிசெய்ய வேண்டும்.- சிவகுமார், வீரபாண்டி.

தண்ணீர் வீண்

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை அறுவை சிகிச்சை பிரிவு முன்புறம் உள்ள குடிநீர் குழாய் வால்வு உடைந்துள்ளது. தண்ணீர் வீணாகிறது.- கனகராஜ், கண்டியன்கோவில்.

பல்லாங்குழி சாலை

ராக்கியாபாளையத்தில் இருந்து மணியகாரம்பாளையம் செல்லும் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர். தார் சாலை அமைக்க வேண்டும்.- பாபுதரன், ராக்கியபாளையம்.

போக்குவரத்து இடையூறு

திருப்பூர், காந்தி நகர் - ஈஸ்வரன் நகர் இணைப்பு சாலையில் கனரக வாகனங்கள் இருபுறமும் நிறுத்தப்படுவதால், இடையூறு ஏற்படுகிறது. பார்க்கிங் முறைப்படுத்த வேண்டும்.- வின்ரோஸ்,காந்தி நகர்.

ஒளிராத விளக்கு

திருப்பூர், 12வது வார்டு, அண்ணா வீதி, மகாலட்சுமி நகர் விரிவு உள்ளிட்ட பகுதிகளில் தெருவிளக்குகள் எரிவதில்லை. வீதி முழுதும் இருள்சூழ்ந்து காணப்படுகிறது.- முபாரக் பாட்ஷா, அண்ணா வீதி.

குழியான சாலை

நெருப்பெரிச்சல், தோட்டத்துப்பாளையம் ஸ்டாப்பில், தார் சாலை சேதமாகி, குழியாகியுள்ளது. இரவில் வாகன ஓட்டிகள் தடுமாறி விழுகின்றனர். குழியை மூட வேண்டும்.-- கார்த்திக் சாமிநாதன், தோட்டத்துப்பாளையம்.

சகிக்க இயலா துர்நாற்றம்

திருப்பூர், மத்திய பஸ் ஸ்டாண்ட் எதிரிலுள்ள உள்ள உயர்மட்ட பாலத்தின் கீழ் பலர் சிறுநீர் கழித்து அசுத்தம் செய்கின்றனர்; துர்நாற்றம் வீசுகிறது. மாநகராட்சி துாய்மை பணி மேற்கொள்ள வேண்டும்.- குட்டி, அவிநாசி.

இதற்கா தடுப்பு வேலி!

கரைப்புதுார் ஊராட்சி, நொச்சிபாளையம் - அல்லாளபுரம் ரோட்டில் கொட்டிய குப்பையை அள்ளாமல், அப்படியே துணி கட்டி தடுப்பு வேலி அமைத்துள்ளனர்.- செல்வராஜ், மீனாம்பாறை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ