உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சாலையில் குளம்; எப்போது வற்றுமோ!

சாலையில் குளம்; எப்போது வற்றுமோ!

மழைநீர் தேக்கம்திருப்பூர், 15 வேலம்பாளையம், அமர்ஜோதி கார்டனில் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. மழை பெய்தும் போதெல்லாம், வழிந்தோட வழியின்றி மழைநீர் தேங்கி நிற்கிறது.- பிரியங்கா, அமர்ஜோதி கார்டன். திருப்பூர், 25வது வார்டு, பாட்டையப்பன் நகர் மெயின் வீதியில் ரோடு வசதி முறையாக இல்லை. மழை பெய்தால், வாகனங்கள் செல்ல வழியின்றி அதிகளவில் மழைநீர் தேங்கி விடுகிறது. விரிவான சாலை வசதி ஏற்படுத்த வேண்டும்.- நடராஜ், பாட்டையப்பன் நகர். கால்வாய் அடைப்புதிருப்பூர், பி.என்., ரோடு, போயம்பாளையம் முதல் நல்லாறு வரை மழைநீர் வடிகால்கள் மண் சேர்ந்து மூடிய நிலையில் உள்ளது. மண் அள்ளி, அடைப்புகளை அகற்ற வேண்டும்.- வெங்கடாச்சலம், போயம்பாளையம். கால்வாய் அடைப்புதிருப்பூர், ஆண்டிபாளையம், முல்லை நகர் முதல் வீதியில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வழிந்தோடுகிறது. சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.- பார்த்தி, முல்லை நகர். பல்லாங்குழி சாலைகுப்பாண்டம்பாளையம் கடைசி வீதியில், ரோடு போட வேண்டும். சாலை குண்டும் குழியுமாக உள்ளது. வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர்.- சரவணன், குப்பாண்டம்பாளையம். திருப்பூர், தாராபுரம் ரோடு, கே.செட்டிபாளையம், வெங்கடேஸ்வரா நகரில் கால்வாய் அடைப்பால், கழிவுநீர் செல்ல வழியில்லை. புதர் மண்டி காணப்படுகிறது.- சுரேஷ், வெங்கடேஸ்வரா நகர். மின்கம்பம் சேதம்திருப்பூர், தாராபுரம் ரோடு, அரசு மருத்துவமனை பின்புறம் கோபால் நகர் ஐந்து வீதியில் மின்கம்பம் சேதமடைந்து, விழும் நிலையில் உள்ளது. மின்கம்பத்தை மாற்ற வேண்டும்.- ஷியாம், கோபால் நகர். நாய்த்தொல்லைதிருப்பூர், சாமுண்டிபுரம், அமர்ஜோதி வீதியில் தெருநாய்த்தொல்லை அதிகமாக உள்ளது. ரோட்டில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்துச் செல்ல வேண்டும்.- பவித்ரா, அமர்ஜோதி வீதி. ஒளிராத விளக்குதிருப்பூர், காங்கயம் ரோடு, வி.ஜி.வி., கார்டனில் தெருவிளக்குகள், 15 நாட்களாக எரியாமல் இருள்சூழ்ந்து காணப்படுகிறது. புதிய தெருவிளக்கு பொருத்த வேண்டும்.- தங்கப்பன், வி.ஜி.வி., கார்டன். முத்தண்ணம்பாளையம் - நல்லுார் ரோடு, பொன்முத்து நகர் மூன்றாவது வீதியில் இரண்டு வாரங்களாக தெருவிளக்கு எரிவதில்லை.- செந்தில்குமார், முத்தணம்பாளையம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை