உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாணவர்களின் வளமான எதிர்காலமே எங்கள் இலக்கு! ஏ.வி.பி., கல்விக்குழும தலைவர் பெருமிதம்

மாணவர்களின் வளமான எதிர்காலமே எங்கள் இலக்கு! ஏ.வி.பி., கல்விக்குழும தலைவர் பெருமிதம்

''மாணவர்களின் எதிர்காலம் சிறக்க வேண்டும் என்பதே எங்கள் கல்விப்பணியின் நோக்கம்'' என்கிறார், ஏ.வி.பி., கல்விக்குழும தலைவர் கார்த்திகேயன் கூறியதாவது:வேலைவாய்ப்பு, வருமானம்...இதை வைத்தே, மாணவர்கள் உயர்கல்வியை தேர்வு செய்கின்றனர். எங்கள் பள்ளி, கல்லுாரிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு அவர்களின் எண்ணத்தை பூர்த்தி செய்யும் வகையிலான பயிற்சியை, அவர்கள் கல்வி கற்கும் சமயத்திலேயே வழங்குகிறோம்.தொழில்துறை, ஐ.டி., துறை சார்ந்த பயிற்சிகளை வழங்கி, அதில் தனித்தனியாக தேர்வும் வைத்து, மாணவர்களின் திறமையை பட்டை தீட்டுகிறோம். அதன் விளைவு, தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தில், சிறந்து கல்லுாரி என்ற அங்கீகாரத்தை பெற்றிருக்கிறோம். பள்ளி மாணவ, மாணவியரை, கல்லுாரிகளுக்கு அழைத்து சென்று, என்னென்ன பாடப்பிரிவுகள், எதை படித்தால் எதுமாதிரியான எதிர்காலத்தை உருவாக்கி கொள்ள முடியும் என்பதையும் அவர்களுக்கு வழிகாட்டுகிறோம்.கல்வி, விளையாட்டுக்கு வழங்கப்படும் முக்கியத்துவத்துக்கு இணையாக மாணவ, மாணவியரின் ஒழுக்கத்தை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. பொதுவாக, தற்போதைய நிலையில் மாணவ, மாணவியர் பலர் போதை பழக்கத்துக்கு அடிமையாகி இருக்கின்றனர். எனவே, அவர்களை கண்காணிக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு பெற்றோருக்கு உண்டு.தங்கள் குழந்தையின் செயல்களை, பெற்றோர் அன்றாடம் கண்காணிக்க வேண்டும்.மாணவர்களின் நல்வழிப்படுத்த சைபர் கிரைம் தடுப்பு போலீசார் சார்பில் அவ்வப்போது விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறோம். சமக வலை தளங்கள் பிள்ளைகளின் வளர்ச்சியை வெகுவாக தடுக்கின்றன.அதில் இருந்து அவர்களை மீட்டெடுப்பது குறித்து விழிப்புணர்வை, பெற்றோருக்கு ஏற்படுத்துகிறோம். எங்கள் கல்வி குழுமத்தில் வெறும் பாடம் சார்ந்த கல்வி மட்டுமின்றி, மாணவர்களின் வெற்றிகரமான எதிர்காலத்துக்கு வழிகாட்டும் வகையிலான நிகழ்ச்சிகளை நடத்திவருகிறோம்.இவ்வாறு கார்த்திகேயன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை