உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சாலை அமைக்கும் பணிசர்ச்சைக்கு கிடைத்தது தீர்வு!

சாலை அமைக்கும் பணிசர்ச்சைக்கு கிடைத்தது தீர்வு!

திருப்பூர் : 'திருமுருகன்பூண்டி நகராட்சி பள்ளி வாசல் வீதியில், 16.5 லட்சம் ரூபாயில் சாலை அமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளது' என தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலை அமைக்கும் பணியில் நிலவிய குழப்பத்துக்கு, 'தினமலர்' செய்தியால், தீர்வு காணப்பட உள்ளது.திருமுருகன்பூண்டி நகராட்சி, 2வது வார்டு, தேவராயம்பாளையம் பள்ளிவாசல் வீதியில், குடியிருப்புகளுக்கு இடையே சாலை அமைக்கும் கோரிக்கை தொடர்பாக, நகராட்சி நிர்வாகம் முரண்பட்ட தகவலை தெரிவித்துள்ளதாக, அப்பகுதி குடியிருப்புவாசிகள் புகார் தெரிவித்திருந்தனர். இதுதொடர்பாக செய்தி, 'தினமலர்' நாளிதழில் வெளியானது.இது குறித்து, அப்பகுதி வார்டு கவுன்சிலர் சம்சாத்பேகம் கூறியதாவது:குடியிருப்புவாசிகளின் குற்றச்சாட்டுக்கு உட்பட்ட பகுதியில், கடந்த, ஒன்றரை வருடங்களுக்கு முன்பு தார் சாலை அமைக்கப்பட்டது. பள்ளிவாசல் வீதியில், 20க்கும் மேற்பட்ட சாலைகள் உள்ள நிலையில், ஒவ்வொரு வீதிக்கும் ஒவ்வொரு குறியீடு உள்ளது. 'சாலை மோசமாக உள்ளது' என குடியிருப்புவாசிகளால் குறிப்பிடப்பட்ட பகுதியில், 2 வீதிக்கும் கான்கிரீட் சாலை அமைக்க, 16.50 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு, கடந்த, 3 மாதம் முன்பே 'டெண்டர்' விடப்பட்டு பூமி பூஜை போடப்பட்டது.ஆனால், அப்பகுதியில் உள்ள சிலர், ஆக்கிரமிப்பை அகற்றாமல் சாலை அமைக்க வேண்டும் எனக்கூறி, ஒப்பந்ததாரரை விரட்டி விட்டனர். எனவே, சம்மந்தப்பட்ட வீதியில் நில அளவீடு செய்து, ஆக்கிரமிப்பை அகற்றி சாலை அமைக்க, நிர்வாக ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி