உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / களைகட்டிய கொண்டாட்டம்

களைகட்டிய கொண்டாட்டம்

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார மேம்பாட்டு வாரியம் சார்பில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில், பொங்கல் விழா கோலாகலமாக நடந்தது.திருக்குமரன் நகர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் பொங்கல் விழா நடந்தது. பொருளாளர் அருளானந்தம், வரவேற்றார். தலைவர் ராம்குமார், தலைமை வகித்தார். ஆனந்த் பேசினார். சிறுவர், சிறுமியர், பெரியவர்களுக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. சமத்துவ பொங்கல் வைத்து, தமிழரின் பாரம்பரியம் குறித்து விளக்கப்பட்டது. உரியடி, கலை நிகழ்ச்சிகள் என, விழா களைகட்டியது. வெற்றி பெற்றவர்களுக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன.அவிநாசி சோலை நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளிலும், குடியிருப்போர் நலச்சங்கங்கள் சார்பில், பொங்கல் விழா உற்சாகத்துடன் நடத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை