மேலும் செய்திகள்
திருப்பாதிரிப்புலியூரில் 'டிராபிக் ஜாம்'
04-Feb-2025
திருப்பூர்: திருப்பூர் ரயில்வே மேம்பாலம் அருகே 'ஒன்வே'யில் வாகனங்கள் சீறி வருவதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.திருப்பூர் நகர பகுதியில் போக்குவரத்து நெரிசல், விபத்துக்களை குறைக்கவும் பல்வேறு நடவடிக்கையை திட்டமிட்டு போலீசார் அமல்படுத்தி வருகின்றனர். அவ்வகையில், திருப்பூர் புஷ்பா சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், 'ப்ரீ சிக்னல்'லை அமல்படுத்தினர். இதன் காரணமாக, வாகனங்கள் சீராக சென்று வருகிறது. பி.என்.,ரோட்டில் இருந்து புஷ்பா ரவுண்டானாவில் திரும்பி காலேஜ் ரோடு, அவிநாசி ரோடு செல்லும் வாகனங்களை, ஹார்வி ரோடு வழியாக சுரங்க பாலத்தில் திரும்பி வரும் வகையில் போக்குவரத்தை மாற்றம் செய்தனர்.இச்சூழலில், ரயில்வே மேம்பாலத்தையொட்டி சுரங்க பாலத்துக்கு செல்லும் ரோடு வாகனங்கள் சென்று திரும்பு வகையில் ஒரு வழிபாதையாக உள்ளது. ஆனால், இதனை வாகன ஓட்டிகள் பின்பற்றாமல், அலட்சியமாக 'ஒன்வே'யில் விபத்து ஏற்படும் வகையில் எதிர்திசையில் வந்து பாலம் ஏறுவது மற்றும் அருகே உள்ள பி.என்., ரோட்டுக்கு சென்று வருகின்றனர். விபத்து அபாயத்துடன், போக்குவரத்து நெரிசலும் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, போலீசாரை நியமித்து 'ஒன்வே'யில் செல்ல கூடாது என்று போலீசார் அறிவுறுத்த வேண்டும் மேலும், சுரங்க பாலம் ரோடும் குண்டும் குழியுமாக உள்ளது.இதை சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
04-Feb-2025