மேலும் செய்திகள்
மாநகராட்சிக்கு புதிய கமிஷனர்
24-Jun-2025
திருப்பூர்; திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த முகாமில், சமூக ஆர்வலர் சரவணன் அளித்த மனு:தாராபுரம் நகராட்சி, ஓடை தெருவில், தனியார் பள்ளி எதிரே, நகராட்சியின் 10 தற்காலிக கடைகள் செயல்படுகின்றன. மாற்றுத்திறனாளி பாலாஜி, கடந்த 2019ம் ஆண்டு முதல் காய்கறி கடை நடத்திவருகிறார். கடந்த 10ம் தேதி, சிலர், பாலாஜியின் கடையை, பொக்லைன் வைத்து நொறுக்கிவிட்டனர். இதுகுறித்து தாராபுரம் நகராட்சி கமிஷனரிடம் புகார் அளித்தும், நடவடிக்கை இல்லை.நகராட்சி நிர்வாகம், எவ்வித நோட்டீசும் வழங்காமல், மாற்றுத்திறனாளியின் கடையை மட்டும் இடித்து தள்ளவேண்டிய அவசியம் என்ன? தொழில் போட்டி காரணமாக, சிலரது துாண்டுதலின் பெயரில் கடை இடிக்கப்பட்டதாக தெரியவருகிறது. இதனால், மாற்றுத்திறனாளி பாலாஜியின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. கடையை இடித்து அகற்றியோர் மீது வழக்குப்பதிவு செய்து, சட்ட ரீதியில் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
24-Jun-2025