உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நோய் தடுப்பு பணிகளுக்கு கூடுதல் பணியாளர்கள் நியமனம்

நோய் தடுப்பு பணிகளுக்கு கூடுதல் பணியாளர்கள் நியமனம்

உடுமலை; உடுமலை ஒன்றியத்தில், அனைத்து ஊராட்சிகளிலும் சுழற்சி முறையில் நோய்தடுப்பு பணிகளை மேற்கொள்வதற்கு, கூடுதல் சுகாதாரப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.உடுமலை ஒன்றியத்தில், 38 ஊராட்சிகள் உள்ளன. துாய்மை இந்தியா திட்டம், திடக்கழிவு மேலாண்மை செயல்பாடுகளின் அடிப்படையில், கிராமப்பகுதிகளில் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.இருப்பினும் பருவநிலை மாற்றம் ஏற்படும் நாட்களில், கொசுப்புழு உற்பத்தி அதிகரிக்கிறது. இதனால் டெங்கு போன்ற தொற்று பாதிப்புகளும் அதிகம் பரவுகிறது.நோய்தடுப்பு நடவடிக்கை மேற்கொள்வதற்கு ஒன்றியத்தில் முன்பு, 20 கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.உடுமலை ஒன்றியத்தில் அமராவதி, எரிசனம்பட்டி உட்பட மொத்தமாக நான்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் கீழ், ஊராட்சிகள் பிரிக்கப்பட்டு நோய்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் பற்றாக்குறை நிலையால், டெங்கு பாதிப்புகள் வரும் பகுதிகளுக்கு முக்கியத்துவம் அளித்து, நோய்தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தற்போது அனைத்து ஊராட்சிகளிலும், சுழற்சி முறையில் நோய்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு, கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.ஒன்றிய அலுவலர்கள் கூறியதாவது:நடப்பு மாதம் முதல் கூடுதலாக, 10 கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அனைத்து ஊராட்சிகளிலும் சுழற்சி முறையில் நோய்தடுப்பு குழுவினர் பார்வையிட்டு, தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளனர்.டெங்கு கொசுப்புழு உற்பத்தியை தடுக்கும் வகையில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும், குடியிருப்புகளின் அருகில் சுகாதாரத்தை உறுதிசெய்வதற்கும் இப்பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை