உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / துவக்கப்பள்ளிகளில் இணைய வசதி விபரம்; பதிவேற்றம் செய்ய அறிவுரை

துவக்கப்பள்ளிகளில் இணைய வசதி விபரம்; பதிவேற்றம் செய்ய அறிவுரை

உடுமலை;உடுமலை வட்டார துவக்கப்பள்ளிகளில், ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைப்பதற்கு இணைய இணைப்பு வழங்கப்படுகிறது.அரசு துவக்கப்பள்ளிகளில் இணைய வசதி ஏற்படுத்துவதற்கு, பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது மாநில அரசின் சார்பில், துவக்கப்பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைப்பதற்கு, இணைய வசதி கட்டாய தேவையாக உள்ளது.சில பள்ளிகளில் ஸ்பான்சர்கள் வாயிலாக, ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகள் உள்ளது. இருப்பினும் தற்போது கடைக்கோடி கிராமம் உட்பட அனைத்து பள்ளிகளிலும், இவ்வசதி அமைக்கும் திட்டம் வரவேற்பை பெற்றுள்ளது.உடுமலை வட்டாரத்துக்குட்பட்ட பள்ளிகளில், ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைப்பதற்கான விபரங்கள் குறித்து, எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றுவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும், பிராட்பாண்ட் வாயிலாக, இணைய வசதி பெற்று அந்த விபரங்களையும் பதிவேற்றம் செய்வதற்கு, பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இத்திட்டத்தை தீவிரப்படுத்தி, விரைவில் இணைய வசதி வழங்குவதற்கு, பள்ளி நிர்வாகத்தினர் எதிர்பார்த்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை