உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அகல் விளக்கு விற்பனை ஒளிரும்

அகல் விளக்கு விற்பனை ஒளிரும்

திருப்பூர்: தீபாவளி என்பது தீபங்களின் திருவிழா. தீபாவளிக்கு புத்தாடை, பட்டாசு, பலகாரம் ஒருபுறம் இருந்தாலும், வீட்டில் விளக்கேற்றி பூஜை செய்வது வழக்கத்தில் உள்ளது. தீபாவளி நெருங்கியுள்ள நிலையில், தீபவிளக்கு விற்பனை சுறுசுறுப்பாக துவங்கியுள்ளது.தீபங்களை தயாரித்து, விற்பனை செய்து வரும், ஜெகதீஷ் கூறியதாவது:ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் பிறந்து, ஒரு வாரத்திலேயே, திருக்கார்த்திகை பண்டிகைக்கு அகல் விளக்குகளை தயாரிக்க துவங்குவோம். மழைக்காலம் என்பதால், விளக்குகள் நன்றாக காய்வதற்கு, 15 நாட்கள் பிடிக்கும் என்பதால், காலநிலைக்கு ஏற்ப விளக்கு தயாரிப்போம்.தீபாவளி நாளில் வீடு, தொழில் நிறுவனங்களில் விளக்கேற்றி வழிபடுவது, புதுக்கணக்கு துவங்குவதில் வடமாநிலத்தவர் ஆர்வம் காட்டுகின்றனர். பலர் தீபாவளி நாளில் கோவிலுக்கு சென்று விளக்கேற்றி வழிபாடு நடத்துகின்றனர். தற்போது, சீசன், விற்பனை சற்று மந்தமாக இருந்தாலும், தீபாவளிக்கு முந்தைய நாட்களில் விற்பனை அதிகரிக்கும்.இருப்பினும், கார்த்திகை தீபதிருநாளுக்கு முன் வரும் முதல் பத்து நாட்கள் தான் விளக்குகள் விற்பனை முழுமையாக இருக்கும். நடப்பாண்டு சனி, ஞாயிறு தீபாவளி வராமல், வார நாட்களில் வந்துள்ளதால் கூடுதலாக விளக்குகள் விற்குமென எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ