மானிய விலையில் உளுந்து வேளாண் துறை அழைப்பு
உடுமலை, ; உடுமலை வேளாண் துறையில், விவசாயிகளுக்கு மானிய விலையில் உளுந்து, சோளம் விதைகள் வழங்கப்படுகிறது.பி.ஏ.பி., மூன்றாம் மண்டல பாசனத்திற்கு வரும், 29 ம் தேதி தண்ணீர் திறக்கப்பட உள்ளது. மழை பெய்துள்ளதால், இறவை பாசன நிலங்களிலும் சாகுபடி மேற்கொள்ள விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.வேளாண் துறை சார்பில் சான்று பெற்ற, வம்பன் - 8 ரக உளுந்து மற்றும் கோ - 32 சோள விதைகள் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படுகிறது.குறிச்சிக்கோட்டை துணை வேளாண் கிடங்கில் விவசாயிகளுக்கு தேவையான அளவு இருப்பு உள்ளது. விவசாயிகள் வாங்கி பயன்படுத்திக்கொள்ளுமாறு, வேளாண் உதவி அலுவலர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.