உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இளைஞர், மாணவர் சேர்க்கை; தீவிரப்படுத்துகிறது அ.தி.மு.க.,

இளைஞர், மாணவர் சேர்க்கை; தீவிரப்படுத்துகிறது அ.தி.மு.க.,

திருப்பூர்; திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., அலுவலகத்தில் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. அவைத்தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார்.எம்.எல்.ஏ., விஜய குமார், முன்னாள் எம்,எல்.ஏ., நடராஜ், மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசியதாவது:ஓட்டுச்சாவடியில், 1,200க்கும் அதிகமான வாக்காளர் இருந்தால், பிரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது; அதற்கு தயாராக இருக்க வேண்டும். பாக கிளை அளவில், இளம் தலைமுறை விளையாட்டு அணி, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை அணி, மாணவர் அணிக்கு உறுப்பினர் சேர்க்கை நடக்க வேண்டும்.சார்பு அணிகளும், வீடு வீடாக சென்று, தி.மு.க., ஆட்சியின் பாதிப்புகளை விளக்கிப் பேச வேண்டும். வரும், 10 நாட்களுக்குள், சார்பு அணி நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு, பட்டியல் தலைமைக்கு அனுப்ப வேண்டும்.ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், பகுதி மற்றும் கிளை அளவில், கூட்டங்கள் நடத்தி, ஆலோசிக்க வேண்டும். பகுதி செயலாளர்கள், வாரந்தோறும் கிளை செயலாளர்களை சந்திக்க வேண்டும். மகளிர் அணியினர், கட்சி கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் திரளாக பங்கேற்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை