உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அமரனா... பிரதரா... பிளடி பெக்கரா! தீபாவளி ரேஸில் முந்துவது யார்?

அமரனா... பிரதரா... பிளடி பெக்கரா! தீபாவளி ரேஸில் முந்துவது யார்?

'தீபாவளி சினிமா பந்தயத்தில் முந்தப்போவது யார்?' என்ற எதிர்பார்ப்பு, ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது.கமல்ஹாசன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் தயாரிப்பில் திரைக்கு வருகிறது 'அமரன்'. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இந்த சினிமா உருவாக்கப்பட்டிருக்கிறது.கடந்தாண்டு தீபாவளிக்கு வெளியான சிவகார்த்திகேயன் நடித்த 'பிரின்ஸ்' சினிமா, வெற்றிப்படமாக அமையாத நிலையில், இம்முறை தீபாவளிக்கு ரிலீஸாகும் 'அமரன்', சிவகார்த்திகேயனுக்கு திருப்புமுனையை ஏற்படுத்தும் என கருதுகின்றனர் அவரது ரசிகர்கள்.தீபாவளி ரேஸில், ராஜேஷ் இயக்கத்தில், ஜெயம் ரவி நடித்துள்ள 'பிரதர்' சினிமா திரைக்கு வருகிறது. அக்கா - தம்பி பாசத்தை நகைச்சுவையாக வெளிப்படுத்தும் இந்த படத்துக்கு, குறைந்த தியேட்டர்களே ஒதுக்கப்பட்டுள்ளன.இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தயாரிப்பில், கவின் நடித்துள்ள 'ப்ளடி பெக்கர்' படம் திரைக்கு வருகிறது. அறிமுக இயக்குனர் சிவபாலன், படத்தை இயக்கியுள்ளார். படத்தில் கவினின் பிச்சைக்காரர் தோற்றம், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.தமிழ் படங்களுடன், தெலுங்கில் தயாரிக்கப்பட்டுள்ள துல்கர் சல்மான் நடித்த, 'லக்கி பாஸ்கர்' சினிமாவும் திரைக்கு வருகிறது. இந்த படத்துக்கு மிகக்குறைந்தளவு தியேட்டர்களே ஒதுக்கப்பட்டுள்ளன.----தீபாவளிக்கு சிவகார்த்திகேயன் நடித்த 'அமரன்'; ஜெயம் ரவி நடித்த 'பிரதர்', கவின் நடித்த 'ப்ளடி பெக்கர்' படங்கள் வெளியாகியுள்ளன. இவற்றில் சினிமா பந்தயத்தில் முந்தப்போவது எந்தப்படம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கதையைப் பொறுத்தே ரசிகர்கள் மனநிலை

மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில், தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் சினிமாக்கள், திரைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப திரையிடப்படுகிறது. இதில், 'அமரன்' படத்துக்கு அதிகளவில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரதர், பிளடி பெக்கர் படங்களுக்கு முன்பதிவு சற்று குறைவாகவே இருக்கிறது. இருப்பினும், படம் திரைக்கு வந்த பிறகே, அந்த படங்களுக்கு வரவேற்பை சொல்ல முடியும். தற்போது படங்களின் கதையை பொறுத்தே ரசிகர்களின் மனநிலையும் மாறுகிறது.- ரவிக்குமார், தலைவர், திருப்பூர் தியேட்டர் உரிமையாளர் சங்கத் தலைவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி