மூவர்ண மின் ஒளியில் ஜொலித்த அமராவதி அணை
உடுமலை; உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை, திருப்பூர், கரூர் மாவட்டத்திலுள்ள விவசாய நிலங்கள் மற்றும் வழியோர கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக உள்ளது. சுதந்திர தினம் நேற்று நாடு முழுவதும் கோலாகலாக கொண்டாடப்பட்ட நிலையில், அமராவதி அணையிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, நேற்று முன்தினம் இரவு, அணையில் உபரி நீர் வெளியேறும் மதகு பகுதியில், தேசிய கொடியின் வர்ணங்களுடன், மூவர்ணத்தில் மின் ஒளியில் ஜொலித்தது. மேலும், அணை முழுவதும் மின் விளக்குகள் ஒளிர்ந்ததால், விவசாயிகள், சுற்றுலா பயணியர் மகிழ்ச்சியடைந்தனர்.