உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கல்லுாரிகளுக்கு இடையிலான யோகா போட்டியில் அசத்தல்

கல்லுாரிகளுக்கு இடையிலான யோகா போட்டியில் அசத்தல்

உடுமலை: தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலை., உறுப்பு கல்லுாரிகளுக்கு இடையிலான யோகாசனப்போட்டி, உடுமலை திருமூர்த்திமலை பரஞ்ஜோதியார் யோகா கல்லுாரியில் நடந்தது. இப்போட்டியில், சென்னை தமிழ்நாடு விளையாட்டு பல்கலை., சென்னை ஒய்எம்சிஏ, வேதாத்திரி மகரிஷி யோகா கல்லுாரி, சேலம் சாரதா கல்லுாரி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார், உடுமலை பரஞ்ஜோதியார் யோகா கல்லுாரி மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்றனர். துவக்க விழாவில் பரஞ்ஜோதி யோகா கல்லுாரி பொறுப்பு முதல்வர் டாக்டர் சண்முகப்ரியா வரவேற்றார். கல்லுாரி தாளாளர் செங்குட்டுவன் தலைமை வகித்தார். உலக சமாதான ஆலய பொறு செயலாளர் சுந்தரராமன் யோகா கல்வி குறித்து பேசினார். விளையாட்டுத்துறை செயலாளர் செல்வ லட்சுமி, யோகா செய்வதன் நன்மைகள் குறித்து பேசினார். நிகழ்ச்சியில் உலக சமாதானா ஆலய பொறுப்பாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். போட்டியில் பரஞ்ஜோதி யோகா கல்லுாரி முதலிடமும், தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலை., இரண்டாமிடமும் பெற்றது. போட்டியில் வெற்றியாளர் மற்றும் பங்கேற்றவர் களுக்கு கோப்பைகள், பதக்கங்கள் வழங்கப்பட்டன. கல்லுாரி பேராசிரியர் சிவசுப்ரமணியம் நன்றி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை