வாடகைக்கு செல்வதில் தகராறு ஆம்புலன்ஸ் டிரைவர் மோதல்
தாராபுரம்:தாராபுரத்தில் அரசு மருத்துவமனை முன், தனியார் ஆம்புலன்ஸ் நிறுத்தம் உள்ளது. இங்கு டிரைவர்களாக உள்ள மதன்குமார், 29, மனோஜ்குமார், 26, சகோதரர்கள் ஆவர். இதே ஸ்டாண்டில் டிரைவர்களாக உள்ள ஆதம்ஸ், ரிஸ்வான், சையது அபுதாஹிர் ஆகியோருக்கும், இவர்களுக்கும் வாடகைக்கு செல்வது தொடர்பாக, நேற்று முன்தினம் காலை தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் மனோஜ்குமார், மதன்குமார் காயமடைந்தனர். இருவரும் அளித்த புகாரின்படி தாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.ர்.