உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நகரில் குடிநீர் குழாய் பதிக்க தோண்டிய குழியால் விபத்து

நகரில் குடிநீர் குழாய் பதிக்க தோண்டிய குழியால் விபத்து

உடுமலை;குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட குழி மூடப்படாததால், விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.உடுமலை பஸ் ஸ்டாண்ட்டிலிருந்து, தாராபுரம் ரோட்டை இணைக்கும், யு.எஸ்.எஸ்., காலனி, வாசவி நகர் ரோட்டில், குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடந்து வந்தது.இப்பணிக்காக தோண்டப்பட்ட குழி, இந்த ரோட்டில், மூன்று இடங்களில் மூடப்படாமல் உள்ளது.இரவு நேரங்களில் வாகனங்களில் வருவோர், குழியில் விழுந்து விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. எனவே, குடிநீர் குழாய் பதிக்கும் பணியை விரைந்து முடிக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை