உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பொதுத்தேர்வில் அசத்திய அனுப்பர்பாளையம் அரசு பள்ளி

பொதுத்தேர்வில் அசத்திய அனுப்பர்பாளையம் அரசு பள்ளி

திருப்பூர்; திருப்பூர், அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, பொது தேர்வில் அதிக தேர்ச்சி விகிதம் பெற்று சாதனை படைத்துள்ளது.சமீபத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவில், அனுப்பர்பாளையம் அரசு பள்ளி, 92.1 சதவீதம் தேர்ச்சி பெற்றது. மாணவி மலர்க்கொடி, 552 மதிப்பெண்; ரித்திக், 545 மதிப்பெண்; நித்யா, 540 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதல் மூன்றிடம் பெற்றனர்.பத்தாம் வகுப்பு பொது தேர்வில், 82 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவி பிரியதர்ஷினி, 479 மதிப்பெண் பெற்று முதலிடம்; வர்ஷினி, 471 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம் பெற்றனர். மாணவர் ஸ்ரீஹரி மற்றும் பிரவின் குமார் ஆகியோர், 470 மதிப்பெண் பெற்று, 3ம் இடத்தை பகிர்ந்துக் கொண்டனர். மேலும், 400 மதிப்பெண்களுக்கு மேல், 40 பேர் பெற்றுள்ளனர். அதிகபட்சமாக, தமிழ் பாடத்தில், 97 மதிப்பெண்; ஆங்கிலம் 99; கணிதம், 94; அறிவியல், 96; சமூக அறிவியல் பாடத்தில் 99 மதிப்பெண் பெற்றனர்.இப்பள்ளியில், ஏராளமான மாணவ, மாணவியர் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை, கல்வி அலுவலர்கள், பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் உள்ளிட்ட பலரும் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை