மேலும் செய்திகள்
நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகள்
09-May-2025
உடுமலை; உடுமலை ஆர்.கே.ஆர்., கிரிக்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த 16ம் தேதி வெளியானது. இதில், உடுமலை ஆர்.கே.ஆர்., கிரிக்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற ஷிபியா 496, தியானேஷ் 492, நவ்யாஹரிணி 491 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.மேலும் தேர்வில் 490க்கு மேல் 6 பேர், 480க்கு மேல் 28 பேர், 450க்கு மேல் 99 பேர், 400க்கு மேல் 180 பேர் மதிப்பெண் பெற்றுள்ளனர்.தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும், பள்ளித்தலைவர் ராமசாமி, செயலாளர் கார்த்திக்குமார், முதல்வர் மாலா, பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகத்தினர் பாராட்டு தெரிவித்தனர்.
09-May-2025