உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கொலை வழக்கில் தலைமறைவு நபர் கைது

கொலை வழக்கில் தலைமறைவு நபர் கைது

திருப்பூர்; தாராபுரம் திருமலைப்பாளையத்தில், விருது நகரை சேர்ந்த விக்னேஷ், 28 என்பவரை கடந்த 2021 ஆக., 17ம் தேதி கும்பல் ஒன்று வெட்டி கொலை செய்தது. அலங்கியம் போலீசார் விசாரித்தனர். விருதுநகரில், சங்கர் மற்றும் விக்னேஷ் தரப்புக்கு இடையே நடந்த பிரச்னையை கண்டறிந்தனர். பழிக்கு பழி வாங்கும் வகையில், ஐந்தாவது நபராக விக்னேஷ் கொலை செய்யப்பட்டது தெரிந்தது.கொலை வழக்கு தொடர்பாக, மனோஜ், செல்வம், கருப்ப சாமி, சுகன்ராஜ் என, 12 பேரை போலீசார் கைது செய்தனர்.கொலை வழக்கு விசாரணை தாராபுரம் கோர்ட்டில் நடந்து வருகிறது. ஜாமினில் வெளிவந்த கருப்பசாமி, 24 உட்பட சிலர் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகினர். கோர்ட் அவர்களுக்கு பிடிவாரன்ட் பிறப்பித்தது. தாராபுரம் டி.எஸ்.பி., சுரேஷ்குமார் தலைமையில் தனிப்படை போலீசார் அவர்களை தேடி வந்தனர்.இச்சூழலில், கோவையில் தலைமறைவாக இருந்த விருதுநகர், அல்லம்பட்டியை சேர்ந்த கருப்பசாமி, 24 என்பவரை போலீசார் நேற்று கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி