உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அதர்வண பத்ரகாளி பீடம் ஆண்டு விழா

அதர்வண பத்ரகாளி பீடம் ஆண்டு விழா

பல்லடம் : பல்லடம் அடுத்த வெங்கிட்டாபுரத்தில், அதர்வண பத்ரகாளி பீடம் உள்ளது. இங்கு, 16 அடி உயரத்துடன் ஸ்ரீபிரத்யங்கிரா தேவி மூலவராக அருள்பாலிக்கிறார். கோவிலின், 12ம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.கடந்த 8-ம் தேதி காலை, ஸ்ரீசண்டிகாதேவி ஆவர்ண பூஜை, ஸ்ரீமங்கல மகா சண்டி ஹோமம் ஆகியவை நடந்தன. அன்று மாலை, பிரத்தியங்கிரா தேவி நவசஹஸ்ர ஆவர்த்தி மூல மந்திர ஹோமம் நடைபெற்றது. அதர்வண பத்ரகாளி பீடாதிபதி தத்தகிரி சுவாமிகள் சிறப்பு ஹோமத்தை நடத்தி வைத்தார்.நேற்று காலை, பால்குடம் மற்றும் பூச்சட்டி ஊர்வலம் நடந்தது. பிரத்தியங்கிரா தேவிக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தன. தங்க கவச அலங்காரத்தில், பிரத்தியங்கிரா தேவி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி