உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆண்டிபாளையம் படகு இல்லத்தில் பாதுகாப்பு அம்சங்களில் கவனம்

ஆண்டிபாளையம் படகு இல்லத்தில் பாதுகாப்பு அம்சங்களில் கவனம்

திருப்பூர்; ஆண்டிபாளையம் படகு இல்லத்தில் பொதுமக்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.திருப்பூர், ஆண்டிபாளையம் குளத்தில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் படகு இல்லம் அமைக்கப்பட்டு, படகு சவாரி துவங்கியுள்ளது.மோட்டார் படகு, துடுப்பு படகு, மிதி படகு என, பயணிகளின் விருப்பத்துக்கேற்ப படகுகள் விடப்பட்டுள்ளன. பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் 'லைப் ஜாக்கெட்' அணிந்துதான் படகு சவாரிக்கு பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.இங்கு வரும் குழந்தைகளின் பொழுதுபோக்க, புல்வெளி, அதில் விளையாட்டு உபகரணங்கள் பொருத்தும் பணியும் நடந்து வருகிறது. 'பொழுதுபோக்கு அம்சங்கள் அதிகம் இல்லாத திருப்பூரில், இந்த படகு இல்லம் பயணிகளின் சிறந்த பொழுதுபோக்கு தலமாக இருக்கும்; வார விடுமுறை மற்றும் பொது விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகளவில் இருக்கும்' என, மாவட்ட சுற்றுலா துறையினர் எதிர்பார்க்கின்றனர்.இந்நிலையில், 'படகு சவாரி செய்யும் பயணிகளின் பாதுகாப்புக்கு மிக அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்' என்ற கலெக்டரின் உத்தரவு மற்றும் பரிந்துரைக்கேற்ப, 'ஆண்டிபாளையம் படகு இல்லம் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புக்குழு' அமைக்கப்பட்டிருக்கிறது.ஆர்.டி.ஓ.,வை கமிட்டி தலைவராகவும், மாவட்ட சுற்றுலா அலுவலரை உறுப்பினர் செயலராகவும் கொண்டு, போலீசார், மாநகராட்சி, நீர்வளத்துறை உள்ளிட்ட தொடர்புடைய துறை அதிகாரிகளை உள்ளடக்கி இக்குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இக்குழுவினர் படகு இல்லத்தை குறிப்பிட்ட இடைவெளி நாட்களில் பார்வையிட்டு, பயணிகளுக்கான பாதுகாப்பு அம்சங்களில் கவனம் செலுத்த உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை