மேலும் செய்திகள்
முதல்போக சாகுபடிக்கு நெல் விதைகள் தயார்
31-May-2025
உடுமலை; பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில், பயிர் சாகுபடிக்கு தேவையான விதை, உரம் ஆகிய இடு பொருட்கள் தேவையான அளவு இருப்பு உள்ளதாக வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.பருவ மழைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், பயிர் சாகுபடிக்கு தேவையான இடு பொருட்கள் தேவையான அளவு இருப்பு உள்ளது. நெல் விதை, 48.25 டன், தானிய பயிறுகள், 13.48 டன், பயறு வகை பயிறுகள், 62.97 டன் மற்றும் எண்ணெய் வித்து பயிர் விதைகள், 58.51 டன் இருப்பு உள்ளது.நெல் சாகுபடிக்கு தேவையான யூரியா, பாஸ்பேட் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்களும் தேவையான அளவு இருப்பு உள்ளது. யூரியா, 2, 565 டன், டி.ஏ.பி., 180 டன், காம்ப்ளக்ஸ், 4, 648 டன் மற்றும் சூப்பர் பாஸ்பேட், 420 டன் இருப்பு உள்ளதாக, வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
31-May-2025