பனியன் தொழிலாளி தற்கொலை
திருப்பூர்; பெருந்தொழுவை சேர்ந்தவர் பழனிசாமி, 40; பனியன் தொழிலாளி. திருணமாகி, இரு மகள், ஒரு மகன் உள்ளனர். மதுபோதையில் தனது சகோதரனுக்கு மொபைல் போனில் அழைத்து பேசினார். அதில், 'இரு மகள்களையும் தனியார் கல்லுாரியில் படிக்க வைப்பதற்கு போதிய பணம் இல்லை; அரசு கல்லுாரியில் இடம் கிடைத்தும் கல்லுாரிக்கு செல்ல மகள் மறுப்பு தெரிவிக்கின்றனர். பணம் செலுத்துவதற்கு கடினமாக உள்ளது'' என்று தெரிவித்தார். இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பழனிசாமி துாக்குமாட்டி இறந்தார். நல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.