மேலும் செய்திகள்
காதொலி கருவி வினியோகம்
18-Feb-2025
திருப்பூர்; திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில், பேட்டரி வீல் சேர் பயனாளிகள் தேர்வு முகாம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது.மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வசந்த ராம் குமார் தலைமை வகித்தார். முதுகு தண்டுவடம் பாதித்த, கை, கால் பாதித்த, வீல் சேருக்காக விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர். எலும்பு முறிவு மருத்துவர், மாற்றுத்திறனாளிகளை பரிசோதித்தார். முகாமில், மாற்றுத்திறனாளிகள் 45 பேர் பங்கேற்றனர். தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு, அரசிடமிருந்து பெறப்பட்டு, பேட்டரி வீல் சேர் வழங்கப்படும்.
18-Feb-2025