உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பெங்களூரு - எர்ணாகுளம் புதிய வந்தே பாரத் ரயில் கோவை வழியாக இயங்கும்

பெங்களூரு - எர்ணாகுளம் புதிய வந்தே பாரத் ரயில் கோவை வழியாக இயங்கும்

திருப்பூர்: பெங்களூர் - எர்ணாகுளம் 'வந்தே பாரத்' புதிய ரயில், கோவை வழியாக இயக்கப்பட உள்ளது. கோவையில் இருந்து திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக பெங்களூருக்கு, வியாழக்கிழமை தவிர, தினமும் 'வந்தே பாரத்' ரயில் இயங்கி வருகிறது. இதற்கிடையே, வரும் நவம்பர் மாதத்தில் இருந்து, எர்ணாகுளம் - பெங்களூரு இடையே 'வந்தே பாரத்' ரயில் இயங்க ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த ரயில், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக இயக்கப்படுகிறது. ஏற்கனவே கோவையில் இருந்து திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக சென்னைக்கு புதன்கிழமை தவிர, வாரத்தின் ஆறு நாட்கள் 'வந்தே பாரத்' ரயில் இயங்குகிறது. எர்ணாகுளம் - பெங்களூரு வந்தே பாரத் ரயில் இயக்கப்படுவதன் மூலம், கோவை வழித்தடத்தில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்கிறது. டிக்கெட் முன்பதிவுக்கு ஏற்ப, புதிய வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் நாட்கள் முடிவு செய்யப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ