சாலை அமைக்க பூமி பூஜை
திருப்பூர் ஒன்றியம், பொங்குபாளையம் ஊராட்சி, காளம்பாளையம், பாபுஜி நகரில் தார் சாலை அமைக்க பொது நிதி 10 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிருந்தா கார்டன் பகுதியில் பைப் லைன் அமைக்க திருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதியில் இருந்து 5 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இரு பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது. எம்.எல்.ஏ., விஜயகுமார் பணியை தொடங்கி வைத்தார். மாவட்ட கவுன்சிலர் சாமிநாதன், ஒன்றிய கவுன்சிலர் ஐஸ்வர்ய மகாராஜ், ஊராட்சி மன்ற தலைவர் சுலோச்சனா, துணை தலைவர் ஜெயக்குமார், முன்னாள் தலைவர் மூர்த்தி, வார்டு உறுப்பினர் தனலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.