உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குப்பைக்கு செல்லும் பெரிய வெங்காயம்

குப்பைக்கு செல்லும் பெரிய வெங்காயம்

திருப்பூர்: வடமாநிலங்களில் இருந்து வரத்து அதிகரிப்பு, விலை குறைவால், பெரிய வெங்காய விற்பனை மந்தமாகியுள்ளது. தேக்கமாகி, அழுகல் ஏற்படுவதால், வெங்காயம் குப்பைக்கு செல்கிறது.மஹாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து திருப்பூருக்கான பெரிய வெங்காயம் வரத்து அதிகமாகியுள்ளது. விற்பனை சற்று மந்தமாகியுள்ள நிலையில், வரத்து அதிகரித்துள்ளதால், மொத்த விலை கடைகளில் பெரிய வெங்காயம் ஐந்து கிலோ, 100 ரூபாய்க்கு விற்கிறது. இரண்டாம் தர வெங்காயம் விலை குறைந்த போதும், விற்பனை இல்லை.இருப்பு அதிகரித்துள்ள நிலையில், போதிய அளவில் குடோனில் வெங்காயம் இருப்பு வைக்க முடியாமல், அழுகல் ஏற்பட துவங்கியுள்ளது. இதனால், தென்னம்பாளையம் மார்க்கெட் பின்புற வீதி, ஏ.பி.டி., ரோடு, தெற்கு தோட்டம் உள்ளிட்ட இடங்களில் பெரிய வெங்காயம் குப்பையில் வீசப்பட்டிருந்தது. அதே நேரம், தெளிவான முதல் தர பெரிய வெங்காயம் கிலோ, 28 ரூபாய்க்கு உழவர் சந்தையில் விற்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி