உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க நிர்வாகிகளுக்கு பா.ஜ., வாழ்த்து

திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க நிர்வாகிகளுக்கு பா.ஜ., வாழ்த்து

திருப்பூர்:திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க நிர்வாகிகளுக்கு, பா.ஜ., வினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க நிர்வாகிகள் தேர்தலில், தற்போது பதவியில் இருந்த நிர்வாகிகள் அப்படியே, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு தேர்வாகியுள்ளனர். போட்டியின்றி தேர்வாகியுள்ள நிர்வாகிகளை, பா.ஜ., மாவட்டத் தலைவர் சீனிவாசன் உள்ளிட்டோர் நேரில் சென்று வாழ்த்தினர். ஏற்றுமதியாளர்கள் சங்க நிர்வாகிகளுடன், அமெரிக்க வரி உயர்வு விவகாரம், ஜி.எஸ்.டி., வரி சீரமைப்பு குறித்தும் கலந்துரையாடினர். இதுகுறித்து ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் சுப்பிரமணியன் கூறுகையில்,''சங்க அலுவலகம் வந்திருந்த பா.ஜ., நிர்வாகிகளிடம், ஜி.எஸ்.டி., வரி சீரமைப்பு, பின்னலாடை தொழிலுக்கு மிகவும் உதவியாக இருக்குமென நன்றி தெரிவித்தோம். பிரதமர் மற்றும் நிதியமைச்சருக்கும், அவர்கள் வாயிலாக நன்றி தெரிவித்தோம். அமெரிக்க வரி உயர்வு பிரச்னை தொடர்பாக, நல்ல தகவல் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளனர்,'' என்றார். இந்நிகழ்ச்சியில், ஏற்றுமதியாளர் சங்க செயலாளர் திருக்குமரன், இணை செயலாளர் குமார்துரைசாமி, பா.ஜ., நிர்வாகிகள் சின்னசாமி, மலர்க்கொடி, அருண்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை