உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஜெய் சாரதா பள்ளியில் ரத்த தான விழிப்புணர்வு

ஜெய் சாரதா பள்ளியில் ரத்த தான விழிப்புணர்வு

திருப்பூர்: திருப்பூர், 15 வேலம்பாளையம் ஜெய் சாரதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நேற்று உலக ரத்த தானம் செய்வோர் தினம் கடைபிடிக்கப்பட்டது. தாளாளர் நிக்கான்ஸ் வேலுசாமி தலைமை தாங்கி பேசுகையில், ''ரத்த தானம் செய்வதன் மூலம் பல உயிர்களைக்காக்க முடியும்; நாமும் ரத்ததானம் செய்ய வேண்டும்'' என்று வலியுறுத்தினார்.அறக்கட்டளை செயலர் கீர்த்திகா வாணி சதீஷ் முன்னிலை வகித்தார். மாணவர்கள் குருதி போன்ற வடிவில் காட்சியளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை