ரத்த தான முகாம் 61 யூனிட் சேகரிப்பு
திருப்பூர் : மே தினத்தை முன்னிட்டு, சிகரங்கள் அறக்கட்டளை சார்பில், 91வது ரத்ததான முகாம், திருப்பூர், காலேஜ் ரோடு, சந்திரகாவி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நேற்று நடந்தது.அறக்கட்டளை தலைவர் காமராஜ் வரவேற்றார். துணை மேயர் பாலசுப்ரமணியம், மெஜஸ்டிக் எக்ஸ்போர்ட்ஸ் உரிமையாளர் கந்தசாமி ஆகியோர் முகாமை துவக்கி வைத்தனர். கவுன்சிலர் சேகர் ரத்தம் வழங்கியவர்களுக்கு பதக்கம், சான்றிதழ், துணிப்பை, மரக்கன்று வழங்கினார். தி ஐ பவுண்டேசன் கண் மருத்துவமனை சார்பில் நடந்த இலவச கண் பரிசோதனை முகாம், துளசி பார்மஸி சார்பில் ரத்த அழுத்தம், சர்க்கரை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை மற்றும் உடுமலை அரசு மருத்துவமனைக்கு முகாமில் சேகரிக்கப்பட்ட 61 யூனிட் ரத்தம் வழங்கப்பட்டது.