உள்ளூர் செய்திகள்

ரத்த தான முகாம்

மங்கலம் கிளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில், அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் ரத்த தான முகாம் நடந்தது. கிளை தலைவர் நஷீர், செயலாளர் சான்பாஷா முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் சிக்கந்தர், துணை தலைவர் யாசர் அராபத் ஆகியோர் துவக்கி வைத்தனர். திருப்பூர் அரசு மருத்துவமனை மருத்துவர் குழுவினர் ரத்த வங்கிக்கு ரத்தம் சேகரித்தனர். ரத்த தானம் வழங்கிய நன்கொடையாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி