மேலும் செய்திகள்
படகு இல்லம் திறப்பு விழா
27-Nov-2024
பிச்சாவரத்தில் படகு சவாரி இயக்கம்
03-Dec-2024
திருப்பூர்; ஆண்டிபாளையம் குளத்தில், தமிழ்நாடு சுற்றுலா துறை சார்பில், 1.30 கோடி ரூபாயில் படகு இல்லம் அமைக்கப்பட்டு, படகு சவாரி துவங்கப்பட்டுள்ளது. 8 பேர் அமர்ந்து சவாரி செய்யக் கூடிய இரு மோட்டார் படகு, 4 துடுப்பு படகு, 7 பெடல் படகுகள், சுற்றுலா பயணிகள் சவாரிக்கு உள்ளன.படகு இல்லம் திறக்கப்பட்டு இரு வாரம் கடந்த நிலையில், சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அங்குள்ள சிறுவர் பூங்காவில் விளையாடுவது, திறந்தவெளி அரங்கில் நின்று குளத்தை ரசிப்பது, படகு சவாரியில் ஈடுபடுவது என, பொழுது போக்குகின்றனர். கடந்த ஒரு வாரமாக படகு சவாரி நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இது, பயணிகள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.சுற்றுலா துறையினர் கூறியதாவது: படகு இல்லத்துக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்து வருகிறது. படகு சவாரியில் ஈடுபடும் பயணிகளின் பாதுகாப்புக்கு முழு உத்தரவாதம் அளிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி, ஆர்.டி.ஓ.,வை தலைவராக கொண்டு, மாவட்ட சுற்றுலா அலுவலரை உறுப்பினர் செயலராக கொண்டு, பல்வேறு துறை அலுவலர்களை உள்ளடக்கி 'பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புக்குழு' அமைக்கப்பட்டுள்ளது.படகு சவாரியின் போது ஏதேனும் விபரீதம் ஏற்பட்டால் மீட்பு படகு தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பது விதி; அந்த படகு தருவிக்கப்பட்டுள்ளது. அது வந்து சேரும் வரை படகு சவாரியை நிறுத்தி வைக்குமாறு, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியதை தொடர்ந்து, தற்காலிகமாக படகு சவாரி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் மீட்பு படகு வந்துவிடும்; அதன் பின் படகு சவாரி தொடரும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
27-Nov-2024
03-Dec-2024