மாணவருக்கு புத்தகப்பை; த.வெ.க., தாராளம்
திருப்பூர்; பொங்கல் பண்டிகை முன்னிட்டு, த.வெ.க., சார்பில் பள்ளி மாணவர்களுக்கு கரும்பு மற்றும்புத்தகப்பை வழங்கப்பட்டது.செரங்காடு மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில், வகுப்பறையில் சேதமான தரை தளத்துக்குப் பதிலாக மரத்தால் ஆன தளம் அமைக்கப்பட்டது. மேலும், மாணவர்களுக்கு பொங்கல் பண்டிகை முன்னிட்டு புத்தகப் பையும், கரும்பும் வழங்கப்பட்டது.இதில் த.வெ.க., நிர்வாகிகள் யோகபிரகாஷ், முரளிதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு இவற்றை வழங்கினர்.