பஸ் விபத்து: 7 பயணிகள் காயம்
திருப்பூர்; தாராபுரம் அருகே பஸ் மீது லாரி மோதியில், ஏழு பயணிகள் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.திண்டுக்கல்லில் இருந்து திருப்பூர் நோக்கி பயணிகளுடன் அரசு பஸ் தாராபுரம் வழியாக நேற்று காலை வந்து கொண்டிருந்தது. அவ்வழியாக வந்த லாரி, அரசு பஸ் மீது மோதியது. விபத்தில், பஸ் டிரைவர் அன்புராஜ், 44, பயணிகள் பிரியா, 22, பொன்னி, 36, முருகேசன், 44, தெய்வானை, 48, ஸ்ரீதேவி, 44 மற்றும் பிரியதர்ஷினி என, ஏழு பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.