மின் கம்பத்தில் பஸ் மோதி விபத்து
உடுமலை: உடுமலை அருகேயுள்ள சின்னவீரம்பட்டியை சேர்ந்த, ஈஸ்வரி, 44, தனது மகள் பிரியதர்ஷினி,24, உடன் உடுமலையிலிருந்து திருப்பூர் ரோட்டில், இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவர், சின்ன வீரம்பட்டி பஸ் ஸ்டாப் அருகே வலது புறம் திரும்பினார். அப்போது, பின்னால் உடுமலையிலிருந்து ஈரோடு செல்லும் அரசு பஸ் அவர்கள் மீது மோதி, அருகிலுள்ள மின் கம்பத்தில் மோதியது. இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரும் பலத்த காயமடைந்ததோடு, அரசு பஸ் மோதியதில் ரோட்டோரத்தில் நின்று கொண்டிருந்த, ராமஜெயம்,35, பலத்த காயமடைந்தார்.இதில் காயமடைந்த மூன்று பேரும், உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். உடுமலை போலீசார் விசாரித்து வரு கின்றனர்.