உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பஸ் சேவை மீண்டும் துவக்கம்

பஸ் சேவை மீண்டும் துவக்கம்

காங்கயம்; காங்கயம் - திருப்பூர் இடையே சிவன்மலை வழியாக அரசு டவுன் பஸ் இயங்கி வந்தது. கடந்த 2020ம் ஆண்டில் கொரோனா பரவலின் போது பஸ் இயக்கம் நிறுத்தப்பட்டது. நான்காண்டுகளாக இந்த வழித்தட பஸ் மீண்டும் இயக்கப்படவில்லை. இதனால், பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில், அமைச்சர் சாமிநாதனுக்கு கோரிக்கை விடுத்தனர். அரசு போக்குவரத்து கழகத்துக்கு அமைச்சர் பரிந்துரை செய்தார். மீண்டும், இந்த வழித்தடத்தில் அரசு பஸ் இயக்கம் துவங்கியது. இதனால், சிவன்மலை சுற்றுப்பகுதியிலிருந்து காங்கயம் பகுதிக்குச் செல்வோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை